Kathir News
Begin typing your search above and press return to search.

களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி! இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ:

களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி!  இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ:

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2022 12:19 PM GMT

உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது.




பல பிரபல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் திரு. ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும் அவர் கரைக்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு தன் கம்பீர குரலால் சிவனை போற்றி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்த தெலுங்கு பாடகி திருமதி. மங்கலி இந்தாண்டும் இன்னிசையை வழங்க உள்ளார். மேலும், பாலிவுட் திரை உலகில் பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் திரு. மாஸ்டர் சலீமும் இவ்விழாவில் பாட உள்ளார். அவர் பஞ்சாபி மொழியிலும், சூஃபி இசையிலும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.




அசாமின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் திரு. பப்பான் (Papon) ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் திரு.ஹன்ஸ்ராஜ் ரகுவன்சியும் தங்களின் இசை அர்ப்பணிப்பை வழங்க உள்ளார். இதுதவிர, ஈஷாவின் சொந்த இசை குழுவான 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' வும், ஈஷா சம்ஸ்கிருதி குழுவினரும் தங்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணிக்க உள்ளனர்.

இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் என பல மாநில கலைஞர்களுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்ட உள்ளது. இவ்விழா கோவை ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருப்பதற்காக இத்தகைய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ- டியூப் சேனல்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. மக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின் நேரலை உலக அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவையே முந்தி அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News