நகராட்சி அலுவலகத்தில் இஸ்லாமிய மத அடையாள சின்னம்: தமிழகத்தில் உருது மொழி திணிப்பு!
By : Thangavelu
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் அரபு மொழியில் இஸ்லாமிய அடையாளத்துடன் பெயர் பலகை வைக்கபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுர் மாவட்டம் - பேராம்பட்டு நகராட்சி கமிஸ்னர் அலுவலகம் புரியாத அரபு மொழியில் இடம்பெற்று இருப்பதுடன்
— T S R (@wait_bro_) March 12, 2022
தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழக அரசின் சின்னம் கீழே இருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்தியை எதிர்க்கும் திமுக அரபு மொழிக்கு வக்காலத்து வாங்குகிறதா pic.twitter.com/4DDxIeDOFA
திமுக அரசு இந்தியை எதிர்த்து வரும் நிலையில் ஒரு நகராட்சி அலுவலகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறது. இது போன்றவர்கள் மீது ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணியினர் பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் பின்னரே அரபு மொழியுடன் இருக்கின்ற பெயர் பலகை எடுக்கப்பட்டது.
Source, Image Courtesy: Twiter