ஹிஜாப் தடை தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது!
By : Thangavelu
ஹிஜாப் தடை செல்லும் என்கின்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஹிஜாப் தடை வழக்இ இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது, இதனை விசாரித்த நீதிபதிபகள் கிருஷ்ணா எஸ்.தீட்சித், ரிது ராஜ் அவஸ்தி, ஜே.எம் காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியுளளது. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதே சமயம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமானதும் இல்லை. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹிஜாப் தடை செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை இந்துமுன்னணி வரவேற்கிறது.
— Hindu Munnani (@hindumunnaniorg) March 15, 2022
ஹிஜாப் என்பது பள்ளி சீருடையின் ஒரு அங்கம் இல்லை.
அனைத்து மாணவ மாணவ மாணவிகளும் அரசின் சீருடை சட்டத்திற்கு உட்பட்டவர்களே. மாநிலத்தலைவர்#இந்துமுன்னணி #Hijab #Islam pic.twitter.com/qo68F6zQMH
இந்நிலையில், இந்து தீர்ப்பு பற்றி தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வரவேற்றுள்ளார். இது பற்றி அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்; ஹிஜாப் தடை செல்லும் என்ற கர்நாட உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது. ஹிஜாப் என்பது பள்ளி சீருடையின் ஒரு அங்கம் இல்லை. அனைத்து மாணவ, மாணவிகளும் அரசின் சீருடை சட்டத்திற்கு உட்பட்டவர்களே என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter