Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்!

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2022 10:28 AM GMT

உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு முஸ்லிம்கள் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அம்மாநில கல்வித்துறை தடை விதித்தது. இதனை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் பள்ளியில் அனைவரும் சமம். எனவே சீருடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

இதற்கு தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 17. 3 .2022 அன்று ஹிஜாப் சம்பந்தமாக மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நடந்த முஸ்லிம்களின் கண்டனப் பேரணியின் மேடையில் பேசிய மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா இந்த நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுக்கும் வகையில், நம் பாரத நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதோடு நில்லாமல், அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கொல்லப்பட்டால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முழு பொறுப்பு என்றும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் கொலை செய்வார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் நீதிபதிகளையும் நீதித்துறையையும் மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. அது மட்டுமன்றி சென்ற மாதம் நீதிபதியின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வந்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் என்றும் பேசியுள்ளான். (நீதிபதிகள் குடும்பத்தோடு வெளியே சென்றால் குடும்பத்தை தீர்த்து விடுவேன் என்று பொருள்படும் வகையில் பேசியுள்ளான்) ஏதோ ஒரு முஸ்லிம் இளைஞன் இவ்வாறு பேசி விட்டான் எந்த எடுத்துக் கொள்ளலாம் என்றால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் அவனது கருத்தை ஆதரிக்கும் விதமாக கோஷம் இட்டது என்பது, இது அவனுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல, அங்கே இருந்த மொத்த முஸ்லிம்களின் கருத்தும் அதுவே என்பதை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட வீடியோக்கள் உறுதிப்படுத்துகிறது.

இந்திய திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளையே கொலை செய்வோம் என்று முஸ்லிம்கள் எச்சரிப்பதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட இத்தகைய மிரட்டலை முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த பெரியவர்களும், இயக்கங்களும் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்காதது அவர்களும் அதனை ஆதரிப்பது போல் அமைந்துள்ளது. மேலும் நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய வழக்கறிஞர் பெருமக்கள் குறிப்பாக தமிழக வழக்கறிஞர்கள் யாரும் கூட இது குறித்து கண்டனம் தெரிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இத்தகைய பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் பின்புலம் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News