"தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும்" - விருதுநகர் சம்பவத்திற்கு நீதி வேண்டி அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

By : Dhivakar
விருதுநகரில் 22 வயது இளம் பெண்மணியை, தி.மு.க பிரமுகர் உட்பட அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை எதிர்த்தும், தமிழக அரசு விசாரணை நடத்திட வேண்டியும், வரும் 24ஆம் தேதியன்று விருதுநகரில் பா.ஜ.க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த தி.மு.க பிரமூகரான ஹரிஹரன் 27, இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி, பின்பு ஏமாற்றி அவரை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
அவர் மட்டுமின்றி, அவரது நண்பர்களைம், பள்ளி மாணவர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஹரிகரன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து "ஜூனைத் அகமது 27, பிரவீன் 21 உள்ளிட்டோர் பெண்ணிடம் :வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம்' என்று மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்." இதனால் தன்னை காப்பாற்றுமாறு பாண்டிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்ட்ட அந்த இளம்பெண்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டி பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு நீதி வேண்டி பாரதிய ஜனதா கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்" தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
விருதுநகரிலே 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் , மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறது! 22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரிலே நடத்தப்பட்ட கூட்டு பலாத்காரம் நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது!
தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும்.
என்று பதிவு செய்துள்ளார்.
பா.ஜ.க'வின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் ஆதரவு பெருகி வருகிறது.
