Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் படிக்கட்டாக முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு!

கோயில் படிக்கட்டாக முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு!
X

DhivakarBy : Dhivakar

  |  13 April 2022 11:49 AM GMT

காஞ்சிபுரம்: 905 ஆண்டுகால பழமை வாய்ந்த, முதலாம் குலோத்துங்கச் சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று, கோயில் படிக்கட்டாக பயன்படுத்தப்படுவது, வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.


வரலாற்றை தெளிவுற தெரிந்துக்கொள்ள வரலாற்று ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் வரிசையில், 'கல்வெட்டுக்கள்' பழங்காலத்து சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் புவியியல் போன்றவற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவி வருகிறது.


இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மலையான்குளம் கிராமத்தில், 905 ஆண்டுகால பழமை வாய்ந்த, முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று, கோயில் படிக்கட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இக்கல்வெட்டின் அவலநிலை குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை கூறியதாவது : மலையான்குளம் கிராமத்தில் இரு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. ஒன்று 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது. மற்றொன்று 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்ததாகும். குலோத்துங்க சோழன் காலத்தில், சிறிது காலத்திற்க்கு உத்திரமேரூர் அவன் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. அவனது நாற்பத்து ஏழாவது ஆட்சிக்காலத்தை இக்கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது.


தற்போது 'சிறுமயிலூர்' என்று அழைக்கப்படும் ஊரைத்தான், இக்கல்வெட்டில் 'சிறுகூற்றநல்லூர்' என்று குறிப்பிட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

என்று கூறினார்.


"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கல்வெட்டை, படிக்கட்டில் இருந்து அப்புறப்படுத்தி, உரிய மரியாதை வழங்கி ஆவணப்படுத்த வேண்டும்" என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News