Kathir News
Begin typing your search above and press return to search.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆபத்தை விளைவிக்கும்: உயர்நீதிமன்றம் அதிரடி!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆபத்தை விளைவிக்கும்: உயர்நீதிமன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2022 1:10 PM GMT

தி.மு.க. அரசு பள்ளிகளில் தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

தற்போது பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஒரு ஆண்டுக்குள் நிரப்புவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என்று மிக, மிக குறைந்த அளவிலான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு இன்று வந்தது.

அப்போது கூறிய நீதிபதி, அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிய ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானவை ஆகும். முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானவை ஆகும்.

மேலும், இது போன்ற நியமனத்தில் மாவட்ட கல்வி அலுவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பணி அமர்த்த நேரிடும். இம்மனு தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 31ம் தேதிக்குள் ஒத்தி வைத்தனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News