கரூரில் 1,400 ஆண்டு பழமையான கோயிலில் ஆய்வு! விரைவில் புனரமைக்கப்படுமா?
By : Thangavelu
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து மேட்டு மருதூர் கிராமத்தில் சுமார் 1,400 ஆண்டுகள் பழவைவாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆராஅமுதீஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிற்பங்கள், கல்வெட்டுகளை பாதுகாக்கவும் கோயிலை புனரமைக்க கோரியும் கந்த 30 ஆண்டுகளாக கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கரூர் ஆட்சியர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு தொல்லியல் துறை ஆய்வாளர்களிடம் கோயிலின் சிறப்புகள் பற்றி கேட்டறிந்தார். இதன் பின்னர் கோயிலை புனரமைத்து சிற்பங்களை பாதுகாக்ககோரியும் அப்போது இருந்த அரசுக்கு பரிந்துரையும் செய்தார். அதன் பின்னர் வந்த அரசுகள் இந்த கோயில் பற்றி கண்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தனர். நேற்று (ஜூன் 4) மதியம் கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தேவி என்பவர் கோயிலை ஆய்வு மேற்கொண்டார். இக்கோயிலில் உள்ள சிறப்புகள் பற்றியும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைவில் கோயில் புனரமைப்பு செய்யும் வேலையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
Source: Dinamalar
Image Courtesy:One India Tamil