Kathir News
Begin typing your search above and press return to search.

தினமும் 15 கோடி நஷ்டமா .. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கணக்கு..

தினமும் 15 கோடி நஷ்டமா .. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கணக்கு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Oct 2023 3:26 AM GMT

தமிழகத்தில் சுமார் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நகர் பகுதியில் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள் செல்கிறது. அது மட்டும் கிடையாது மலைப்பகுதிகளுக்கும் தற்போது தமிழக அரசு பஸ்கள் செல்கிறது. ஏழை எளிய மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளை நம்பி தான் இருக்கிறார்கள். குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகளை காட்டிலும் குறைந்த கட்டணத்தை வசூல் செய்கின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 19 ஆயிரம் பஸ்கள் இருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஊழியர்கள் தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.


அரசு நிறுவனத்தில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வந்த அரசு போக்குவரத்து கழகங்கள் ஆண்டுக்கு ஆண்டு தற்போது தேய்ந்து மிகவும் மோசமான சூழ்நிலையில் தற்போது தள்ளாடி கொண்டிருக்கிறது. குறிப்பாக திமுக அரசின் மூலமாக கொண்டு வரப்பட்ட மகளிர் காண இடவசப்பு இருந்து பயணத் திட்டத்தின் மூலமாக தினமும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. அரசு பேருந்துகளில் தினமும் ஒரு கோடியை 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். இதில் 35 லட்சம் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணம் இன்று பயணிக்கிறார்கள். பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 155 லட்சம் பெண்கள் தினசரி பயணம் செய்கிறார்கள். இது தவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். மகளிர் பள்ளி மாணவர்கள் இலவச கட்டணத்திற்கு அரசு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்துக் கழக கொடுத்து வருகிறது. மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியிருக்கிறது.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அரசு பஸ்களில் சிக்கனம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால் போக்குவரத்துக் கழகங்களில் வருவாய் இழப்பு சற்று குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் டீசல் விலை உயர்வு கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தினமும் 15 கோடி நஷ்டத்தை சந்திப்பதாகவும் முடிவு கூறுகிறது. அதிகரித்து வரும் வருவாய் இழப்பை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் கூறி வருகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News