Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் அருமையான திட்டம்.. தமிழகத்திலிருந்து தேர்வான 16 மாவட்டங்கள்..

மத்திய அரசின் அருமையான திட்டம்.. தமிழகத்திலிருந்து தேர்வான 16 மாவட்டங்கள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2023 4:50 AM GMT

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 வட்டாரங்கள் முன்னேற விரும்பும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன . மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில், முன்னேற விரும்பும் வட்டாரங்கள் திட்டம் 2023-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதனை நித்தி ஆயோக் செயல்படுத்துகிறது.


நாட்டில் உள்ள வளர்ச்சி அடையாத, வாழ்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கொண்ட வட்டாரங்களை தேர்வு செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2023-2024-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 27 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 500 வட்டாரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள வட்டாரங்கள் விவரம், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை, கரூர் மாவட்டம் தோகை மலை, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 வட்டாரங்கள் முன்னேற விரும்பும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News