அம்மா மினிகிளினிக் மூடுவிழா? 1800 டாக்டர்களை வீட்டுக்கு அனுப்பும் தி.மு.க. அரசு!
By : Thangavelu
அம்மா மினி கிளினிக்குகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதனால் ஏழை, எளியோர்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த மினிகிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு 1800 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வந்தனர்.
இதற்கிடையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு இடங்களில் உள்ள அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமல் இருந்தது. இதனால் மருத்துவர்கள் பலர் வேலையிழக்க நேரிட்டது. மேலும், திமுக ஆட்சி அமைந்ததும் மினிகிளினிக்குகளை மூடுவதற்கு முயற்சி செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பணிபுரிந்த மருத்துவர்களின் பணிக்காலம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் பலர் மருத்துவர்களை சுகாதாரத்துறை விடுவித்தது. இதனால் அங்கு பணியாற்றி வந்த 1800 மருத்துவர்கள் தங்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar