Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகளின் முக்கிய அம்சங்கள்!!

சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகளின் முக்கிய அம்சங்கள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 March 2026 7:15 PM IST

2027-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார். இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.


21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. உள்ளூர் நகரப் போக்குவரத்துக்காக முதல் அடுக்கு, சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 2-வது அடுக்கு அமைக்கப்படுகிறது.


தமிழகத்தில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. தற்போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News