Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட முயன்ற 2 கோடி ரூபாய் பொருட்கள் : 6 பேர் கைது!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட முயன்ற 2 கோடி ரூபாய் பொருட்கள் : 6 பேர் கைது!

ParthasarathyBy : Parthasarathy

  |  22 Jun 2021 1:31 PM GMT

திருச்செந்தூர் பகுதியிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு பொருளை சிலர் கடத்தி வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸார் வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ அம்பர் கிரிஸை போலீஸார் கைப்பற்றினர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதிலிருந்தவர்கள் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. . விசாரணையில் அது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர் கிரிஸ் என்பதும், வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான அதற்கு சர்வதேச சந்தையில் கோடிக் கணக்கில் மதிப்புள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் விசாரித்ததில் அவர்களின் அடையாளம் மற்றும் முகவரி தெரியவந்தது.

மேலும் அவர்கள் அந்த 2 கிலோ எடையுள்ள அம்பர் கிரிஸை இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும். அம்பர் கிரிஸை பறிமுதல் செய்த போலீஸார் 6 பேரையும் காருடன் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரனிடம் ஒப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் கூறும்போது "அம்பர் கிரிஸ் 1972 ஆம் ஆண்டு வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருளாகும். அம்பர் கிரிஸை எங்கிருந்து எடுத்தார்கள் என்பது குறித்து 6 பேரிடமும் விசாரணை நடத்தப்படும். ஹைதரபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு அது பரிசோதனைக்கு அனுப்பப்படும்.'' என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News