Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி வந்தார்! விமோசனம் கிடைத்தது! டெல்டா மக்களின் 20 வருட எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியானது?

மோடி வந்தார்! விமோசனம் கிடைத்தது! டெல்டா மக்களின் 20 வருட எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியானது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2023 6:54 AM GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

தென்னிந்தியாவில் ரயில்வே சேவை தொடக்க காலத்திலேயே திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை போடப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வழிதடத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன அதன் பின்னர் அகலப்பாதை விரிவாக்க திட்டத்துக்காக ரூ.480 கோடியில் இந்த வழித்தடத்தில் அகலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் மேலும் 280 கோடி ரூபாய் ஒதுக்கினார். இப்போது பணிகள் முடைவடைந்து எல்லா வகையான ரயில்களும் செல்லும் அளவிற்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் குறவபுலம், நெய் விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம், அகத்தியம் பள்ளியில் ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில் நான்கு பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் முதல் முறையாக ஆறு ரயில் பெட்டிகளுடன் கூடிய டெமு ரயில் இயக்கப்பட உள்ளது.

அகஸ்தியம்பள்ளியில் இருந்து உப்பு ஏற்றுமதி கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. எதிர்காலத்திலும் நடைபெறும் விதமாக பயணிகள் ரயில் மட்டும் தற்போதைய சமயம் துவக்கப்பட்டாலும் சரக்கு ரயில் வந்து செல்வதற்கான சரக்கு முனையம் இந்த ரயில் நிலையத்தில் கட்டப்பட உள்ளது.

Input From: ABP Live

Next Story
கதிர் தொகுப்பு
Trending News