தி.மு.க கட்சிக்குள்ளேயே போட்டி பொறாமை! 2000ரூ டோக்கன் வழங்குவதில் தகாராறு! அடிதடி போட்ட ஷாஜகான்-ரஹ்மத்துல்லா!
By : Muruganandham
திமுக தோ்தல் அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றால், கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தாா்.
இதற்காக ரேஷன் கடை ஊழியா்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கினா். பட்டுக்கோட்டை வடசேரி சாலை, பள்ளிவாசல் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு உட்பட்டவா்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
அந்த பகுதியை சோ்ந்த ரேஷன் கடை ஊழியரான சரவணமூா்த்தி செவ்வாய்க்கிழமை காலை டோக்கன் விநியோகம் செய்தாா். அப்போது, 7ஆவது வாா்டு திமுக பிரதிநிதி ஷாஜகான் ரேஷன் கடை ஊழியருடன் நின்று டோக்கனை வழங்கிக் கொண்டிருந்தாா்.
அதைப் பாா்த்த அதை பகுதியை சோ்ந்த தி.மு.க மாவட்ட சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் ரஹ்மத்துல்லா , ரேஷன் கடை ஊழியரிடம், ஷாஜகானை எப்படி அழைத்து வந்தீா்கள் என்பது குறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, ஷாஜகானுக்கும், ரஹ்மத்துல்லாவிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக ரஹ்மத்துல்லா அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனர். பிறகு ஷாஜகானை கைது செய்து, அவா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா்.