அ.ம.மு.க கொடுத்த 'அல்வா' - ஆர்.கே நகர் தேர்தல் பாணியில் 2000 உவா டோக்கன்! கம்பி எண்ணும் விசுவாசி!
By : Muruganandham
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கிய அதே பாணியை பின்பற்றி கும்பகோணம் தொகுதி வாக்காளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய்க்கு போலி டோக்கனை கொடுத்து ஏமாற்றியுள்ளார் அமமுக நிர்வாகி.
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதையும் மீறி டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார் அமமுக நிர்வாகி.
இதனை தொடர்ந்து கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள மளிகைக்கடைக்கு, கடையின் பெயர் இடம்பெற்றிருந்த டோக்கனைக் கொடுத்து பொருள்களை வாங்க மக்கள் திரண்டனர்.
2000 ரூபாய்க்கான மளிகைப் பொருட்களை இலவசமாக கொடுக்குமாறு கேட்க கடையின் உரிமையாளர் திணறிப்போனார். நிலையை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கடையையே மூடி விட்டார் அவர். கடைக்கும் டோக்கனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி ஓட்டினார்.
டோக்கன் விவகாரம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதன்பேரில், அமமுக நிர்வாகி கனகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணம் அளித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.