கடைசி கட்டத்தில் லீக் ஆன சீக்ரெட் தகவல்! தி.மு.க வேட்பாளர் மீது 21 கிரிமினல் வழக்கு - தேர்தல் களத்தை அடியோடு மாற்றி அமைக்கும் பிராமணப் பத்திரம்!
By : Muruganandham
ஜெயங்கொண்டம் தொகுதியை இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.. திமுக சார்பில் கேஎஸ்கே கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார்..
திமுக வேட்பாளர் மீது 21 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அவை இந்திய தண்டனை சட்டத்தின் முக்கிய பிரிவுகளின் கீழும் இருக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் அந்த வேட்ப மனு விவகாரத்திலேயே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்போதுவரை மொத்தம் 21 கேஸ்கள் கண்ணன் மீது இருக்கிறது. அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்களை நாசம் செய்தல், கொரோனா பரவிய காலம் அன்றே போராட்டங்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கியது முதல் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையெல்லாம் அவரே தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே பாமக வேட்பாளர் பாலுவை பொறுத்தமட்டில், மிகச்சிறந்த வழக்கறிஞர். 8 வழி சாலை போராட்டம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் பலவற்றில் முன்னின்று போராடியவர். சட்ட போராட்டம் நடத்தியவர். இதனால் தொகுதியில் பிரபலமானவர். மக்கள் செல்வாக்கை நேரடியாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.