கொரோனா 3வது அலைக்கு எதிராக முன்கூட்டியே தயாராக இருப்பதற்கான பயிற்சி!

By : Bharathi Latha
மருத்துவ குழுவினர்களில் கூற்றுப்படி ,கட்டாயம் மூன்றாவது அலை வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் அவற்றுக்கான தகுந்த முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக மக்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
அந்த வகையில் தற்போது முன்கூட்டியே மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதன் மூலமாக நிச்சயமாக அவற்றை எதிர்கொள்ள முடியும். அவசர காலத்தில், உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களை கையாளுவது குறித்து டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில், பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மூன்றாம் அலை கொரோனாவை சமாளிக்கும் வகையில் அம்மருத்துவமனை தயாராகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அலை தொற்றை எதிர்கொள்ள மருத்துவமனை டாக்டர்கள் தயாராகி வருகின்றனர். தகுந்த நேரத்தில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை எப்படி கையாள வேண்டும் என டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியின் மூலம் அவசர காலத்தில் நோயாளிக்கு அவை உதவியாக அமையும். இது குறித்து மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி கூறுகையில், " தற்பொழுது நவீன தொழில்நுட்பங்கள் குறித்து டாக்டர்களுக்கும், நர்ஸ்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அவசர காலத்தில், மருத்துவ உபகரணங்களை எப்படி? கையாள வேண்டும் என்பதையும், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இந்த பயிற்சி, டாக்டர்களுக்கு மட்டுமின்றி, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
