Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் - சிக்கிய 3 'மர்ம நபர்கள்'

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் - சிக்கிய 3 மர்ம நபர்கள்
X

DhivakarBy : Dhivakar

  |  28 April 2022 7:20 AM GMT

கன்னியாகுமரி :பள்ளி மாணவர்களுக்கு, கஞ்சா பொட்டலங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், இளம் வயது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என அனைத்து தரப்பட்ட இளைஞர்களும் கஞ்சா போதையில் மூழ்கியுள்ளனர். இதற்கு ஏற்றார் போல் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா விநியோகம் நடைபெற்று வருவது வருத்தமளிப்பதாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக காவல்துறை ஆபரேஷன் 2.O என்ற திட்டத்தை முன்னெடுத்து, கஞ்சா விநியோகஸ்தர்களை தமிழகம் முழுவதும் மடக்கிப்பிடித்து கைது செய்து வருகிறது.


இதன் வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில், தனியார் பள்ளி அருகே, தனிப்படை போலீசார் ரோந்தில் ஈடுபட்ட போது, சந்தேகிக்கும்படியான மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்தனர்.


அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், ஸ்டாலின், ஷாஜா மற்றும் ராஜித் என்ற இந்த மூவர், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்பவர்கள் என்பது தெரியவந்தது.


பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு சிறையில் அடைத்தனர்.


News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News