எந்த துறையும் சாதாரணமாக விடவில்லை: ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி!
By : Kathir Webdesk
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் படகின் விலை தோராயமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் ஆகும். நாட்டுப் படகு வைத்திருப்போர் ஆழ்கடல் மீன்பிடி படகு வாங்குவதற்கு படகின் விலையில் 60% தொகை அரசு மானியமாக வழங்குகின்றது என்று கூறிய அமைச்சர் மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் நல்வாழ்விலும் அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
மீனவப்பெண்கள் வருவாய் ஈட்ட மாற்று வேலைகளில் ஈடுபடலாம். கடல் பாசி வளர்த்தல், சுகாதாரமான முறையில் நவீனமாக கருவாடு உற்பத்தி செய்தல், இறால் குஞ்சு வளர்ப்பு போன்றவற்றில் இவர்கள் ஈடுபடலாம்.
முத்ரா போன்ற கடன் வழங்கும் திட்டங்கள் மூலம் மூலதனத்துக்கான கடன்களை இவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அரசின் பல்வேறு கடன் திட்டங்கள் மூலமாக தண்டல் முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளவு அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாப்பட்டு, ராஜ்பவன், மணவெளி தொகுதிகளில் ரூ.100 கோடி செலவு மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுக மேம்பாடு, இறங்குமுகம் அமைத்தல்ஆகியவற்றுக்கான திட்டத்துக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான தொடக்க விழா நடைபெறும் என்றும் முருகன் தெரிவித்தார்.