ஏதே! இது டி.என்.பி.எஸ்.சி கேள்வி தாளா இல்லை முரசொலியா? -'குரூப் 4' வினாத்தாள் பற்றி எழுதியவர்கள் விமர்சனம்!
By : Thangavelu
தமிழக அரசு சார்பில் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் ஆளுங்கட்சியான தி.மு.க.வும், அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கின்ற வகையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
தமிழக அரசில் 7,301 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மூலமாக நேற்று (ஜூலை 24) தேர்வு நடைபெற்றது. அந்த கேள்வி வினாவில் ஆளுங்கட்சி மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கின்ற வகையில் கேட்கபட்டிருப்பதாக தேர்வர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இது பற்றி தேர்வு எழுதிய சிலர் கூறும்போது: தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு வினாவுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதில் 117வது வினாவில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி, அஸாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்கள் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
மேலும், ஈ.வே.ராமசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பற்றிய 5 கேள்விகளும் கேட்கப்பட்டது. அதே போன்று தி.மு.க. கட்சியின் பத்திரிகையான முரசொலி பற்றியும் 48வது வினாவில் கேட்கப்பட்டது. ஆளுங்கட்சியின் தோழமைக் கட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கின்ற நோக்கத்திலும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இது போன்று எப்போதும் கேள்விகள் கேட்கப்படவில்லை. இந்த முறை ஆளுங்கட்சியை புகழ்ந்து பாடுவது போன்று வினாத்தாள் இருக்கிறது என்று தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
Source, Image Courtesy: Dinamalar