விஸ்வரூபம் எடுக்கும் போலி பாஸ்போர்ட் விவகாரம் - 41 பேர் நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல்!
By : Thangavelu
பாஸ்போர்ட் மோசடி பற்றிய விவகாரத்தில் 41 பேர் மீது நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள இலங்கையை சேர்ந்த சிலர், இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கசிந்தது. இதனையடுத்து கடந்த 2019 செப்டம்பர் 27ம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மதுரையில் இயங்கி வந்த 4 பயண முகவர்களின் அலுவலகங்கள், அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 4 பயண முகவர்களும் அன்றைய நாளில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 124 பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. 51 பேர் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்தது. மொத்தமாக 175 பாஸ்போர்ட்டுகளில் 28 பாஸ்போர்ட்டுகள் இலங்கைத் தமிழர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து பெற்றிருப்பது தெரியவந்தது. அந்த 28 பாஸ்போர்ட்டுகளில் 7 இலங்கையை சேர்ந்தவர்கள் மீது மதுரையில் 21 பேர் மீது இதற மாவட்டங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருக்கிறது.
இது தவிர்த்து 30 பாஸ்போர்ட்டுகள் இந்தியர்களுக்கு உரியதா அல்லது இலங்கை நாட்டினர் பெற்றுள்ள பாஸ்போர்ட்டுகள் என்பது பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது. மீதம் இருக்கின்ற 117 பாஸ்போர்ட்டுகள் ஒரு இந்தியருக்கான போலி பாஸ்போர்ட்டு தவிர்த்து 116 பாஸ்போர்ட்டுகளும் இந்தியர்களுக்கு உரியது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எத்தனை போர் கைது செய்யப்பட்டனர் மற்றும் மதுரை நகர க்யூ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை 475 சாட்சிகள் விசாரணை நடைபெற்று, 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரையில் இந்திய கடவுச் சீட்டு பெற்றுள்ள 4 இலங்கைத் தமிழர்களும் மற்றும் 11 பயண முகவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இந்திய பாஸ்போர்ட் பெற்ற 7 நபர்கள் 13 பயண முகவர்கள், 5 போலீஸ் உயர் அதிகாரிகள், 14 மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், 2 தபால்துறை அலுவலர்கள் என்று மொத்தம் 41 பேர் குற்றம் புரிந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது புலன் விசாரணை இறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் 41 பேர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட உள்ளது.
Source, Image Courtesy: Dinamani