Kathir News
Begin typing your search above and press return to search.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்!! 450-க்கும் மேற்பட்டோர் கைது!!

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்!! 450-க்கும் மேற்பட்டோர் கைது!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Feb 2026 4:19 PM IST

மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி நடந்த இப்போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்திலும் ஆந்திராவில் வழங்குவதை போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. உதவித் தொகையை உயர்த்தி தரக் கோரி 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக மாற்றுத் திறனாளிகள் கூறினர்.


இதைத்தொடர்ந்து போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி உள்பட 450-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 6,500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மாற்றுத் திறனாளிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News