Kathir News
Begin typing your search above and press return to search.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 5வது, 6வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்!

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 5வது, 6வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  29 Jun 2021 2:29 PM GMT

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை ரஷ்யாவின் உதவியுடன் 2013 ஆம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகின்றன.


இந்த அணுமின் நிலையத்தில் அமைந்துள்ள முதல் அணு உலையில் 2014 ஆம் ஆண்டும், 2-வது அணு உலையில் 2016 ஆம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை கடந்த 2016 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். தற்போது 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான நில அகழ்வு பணிகள் முடிவடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கட்டுமான பணிகளைத் தொடங்க இந்திய அணுசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில், கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க நிகழ்வில் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். புதிதாக அமைக்கவுள்ள இந்த 2 அணு உலைகள் மூலம் கூடுதலாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News