தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் 55 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..
By : Bharathi Latha
நீலகிரி தொகுதி தி.மு.க எம்.பி-யாக இருப்பவர் ஆராசா இவர் மத்திய மந்திரி யாகவும் தற்போது இருந்து வருகிறார் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்து இருப்பது தொடர்பாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் இதற்கிடையில் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின்படி ஆ. ராசாவிற்கு சொந்தமான கோவையில் உள்ள 15 அசையா சொத்துக்களை பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் என்ற பெயரில் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தற்போது தெரிவித்து இருக்கிறது.
இந்த ஒரு செய்தி தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 55 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் தற்காலிக இணைப்பு உத்தரவை உறுதிப்படுத்துவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்க துறை தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பகுதிகளின் இது பற்றி கருத்துகளை தெரிவித்து இருக்கிறது.
ஆ. ராசா அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது அமலாக்க துறையினர் 55 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து இருப்பது திமுக தரப்பில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News