தருமபுரி: 61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்!
By : Thangavelu
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 61 வயதான ஓய்வுப் பெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வை எழுதி வெற்றியும் கண்டுள்ளார். தற்போது அவர் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்திருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இன்று (ஜனவரி 28) கவுன்சிலிங் துவங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 436 மருத்துவ இடங்களும், 97 பிடிஎஸ் என்று 533 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலிங்கில் 61 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் பங்கேற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.
அவரது பெயர் சிவபிரகாசம் என்பதும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் இவர் அரசுப் பள்ளியில் நீட் பயிற்சி கொடுத்து வருகின்றார் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். இவர் மருத்துவம் படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar