Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் அமைச்சர் நீலோபர் கபிலை அ.தி.மு.க நீக்கிய பகீர் பின்னணி!

முன்னாள் அமைச்சர் நீலோபர் கபிலை அ.தி.மு.க நீக்கிய பகீர் பின்னணி!
X

MuruganandhamBy : Muruganandham

  |  23 May 2021 8:43 AM IST

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ₹6.62 கோடி மோசடி செய்துள்ளதாக அவரின் உதவியாளர் டி.ஜி.பி அலுவகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார்.

அதில், அமைச்சரின் உதவியாளராக கடந்த 5 வருடங்கள் இருந்தேன். அப்போது சிலர் வேலை சம்பந்தமாகவும், டெண்டர் விஷயமாகவும் அமைச்சரை பார்க்க வருவார்கள். அப்போது அமைச்சர் என்னை பார்க்க சொல்வார்கள்.

அதற்கு அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அதை வாங்கி அமைச்சரின் உறவினர்களிடம் பணத்தை கொடுத்துவிடுவேன். அதைப்போன்று கடந்த 5 வருடமாக ஈடுபட்டு வந்தேன்.

கொரோனா தொற்றினால் நினைத்தது போன்று வேலை வாங்கி தர முடியவில்லை. அதனால் பணம் கொடுத்தவர்கள் அழுத்தம் தர ஆரம்பித்தனர். அப்போது முன்னாடி பணம் கொடுத்த நபர்கள் கேட்கும் போது அப்போது தருபவர்களிடம் வாங்கி கொடுத்தோம்.

அதன்பிறகு கட்சியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களுடைய உறவினர்களிடம் கூறினேன்.

அதற்கு அவர்கள் மறுபடியும் நம்முடைய ஆட்சி வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினர். அதன்பிறகு தேர்தலில் சீட் இல்லை என்று தெரிந்தவுடன் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். அதன்பிறகு அவர்களின் நடவடிக்கை சரியில்லாமல் என்னை ஒதுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பணம் கொடுத்தவர்கள் என்னை வீட்டில் வந்து மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி தி.மு.க-வுக்கு ஆதரவாக உள்ளடி வேலை செய்ததாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனாலேயே, அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News