Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை! மாடல் ஆட்சியில் கல்வித்துறை வாடல்!

தமிழகத்தில் 680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை! மாடல் ஆட்சியில் கல்வித்துறை வாடல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 May 2023 2:07 AM GMT

பள்ளிக் கல்வி துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டும் 6000 உள்ளன. இதில் 680 அரசு மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் இடமாறுதல் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி இரண்டு தினங்களுக்கு முன் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது.

இடமாறுதலின்போது பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டனர். அதையடுத்து 680 மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் அப்பள்ளிகள் எப்படி செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாக பிரச்னை ஏற்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதற்குள் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News