Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அனல்மின் நிலையங்களில் 69 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு - எரிசக்தி மின்வாரிய அதிகாரி தகவல்!

தமிழக அனல்மின் நிலையங்களில் 69 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு - எரிசக்தி மின்வாரிய அதிகாரி தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  25 April 2022 6:39 PM IST

தமிழக அனல்மின் நிலையங்களில் 69 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. அரசின் போர்க்கால நடவடிக்கையால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி, மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளார்.


இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு சராசரியாக 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலான மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். தற்போது கோடைகாலம் தொடங்கியிருப்பதால் கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அதனை முழுமையாக உற்பத்தி செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடசென்னை மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் 69 ஆயிரம் டன் நிலக்கரிதான் கையிருப்பு உள்ளது. தற்போது கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும். விரைவில் மின்சாரத்தேவை பூர்த்தியடையும் என்றார்.

Source: Daily Thanthi

Image Courtesy:பிபிசி




Next Story
கதிர் தொகுப்பு
Trending News