தமிழகத்தில் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 உயர்வு: கட்டுமான பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
By : Thangavelu
கட்டுமான பணிகளுக்கான சிமென்ட் விலை ஒரு வாரத்தில் மட்டும் மூட்டைக்கு 70 ரூபாய் அதிகரித்திருப்பது வீடு கட்டுபவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற மாநிலங்களில் கூட இவ்வளவு விலை ஏற்றியது இல்லை, ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்கிறது. சிமென்ட் நிறுவனங்கள் பேசி வைத்தார் போன்று விலையை ஏற்றி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் கூட இவ்வளவு விலை உயர்ந்தது இல்லை என பொதுமக்கள் கூறி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் 50 ரூபாய் விலை குறைத்து தற்போது 70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது சாதாரண மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது போன்ற விலையேற்றத்தால் கட்டுமானங்கள் முடங்கி அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar