அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் தயார்!
அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் தயார்!
By : Thangavelu
அனுமன் ஜெயந்தி விழா நாளை அனைத்து ஆஞ்சநேயர் கோயிலிலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை (ஜனவரி 2) நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக ஆஞ்சநேயருக்கு அன்றைய தினத்தில் அதிகாலை ஒரு லட்சத்து 8 வடை மாலையாக சாத்தப்பட உள்ளது. இதற்காக வடை தயாரிக்கும் பணிகள் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பணியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாலை வடை தயாரிக்கின்ற பணிகள் முடிவடைந்தது.
இதன் பின்னர் வடை மாலையாக கோர்க்கும் பணிகள் துவங்கியுள்ளது. சுமார் 1008 வடைகள் ஒரு மாலையாக கோர்க்கப்படுகிறது. 24 மாலைகள் கோர்க்கப்பட்டு நாளை (2ம் தேதி) அதிகாலையில் 4 மணியளவில் ஆஞ்சநேயருக்கு கோர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே ஆஞ்சநேயரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Image Courtesy:Facebook