டெல்டாவில் 8 மணல் குவாரிகள் திறக்க அனுமதி அளித்த தி.மு.க அரசு - அதிர்ச்சியில் டெல்டா விவசாயிகள்!
By : Thangavelu
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் 8 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே 24ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு மத்தியில் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி செல்வதற்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் பல்வேறு இடங்களுக்கு முழுமையாக தண்ணீர் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் தலா இரண்டு இடங்களிலும், திருச்சியில் ஒரு இடம் என்று மொத்தம் 5 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று சில இடங்களில் மாட்டுவண்டி குவாரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களின் நீரோட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
Source, Image Courtesy: Dinamalar