Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.8 லட்சம் கோடி செலவிடுகிறது!

மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.8 லட்சம் கோடி செலவிடுகிறது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Oct 2022 8:41 AM IST

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசின் 157 திட்டங்கள் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தரப்படும் திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் தரப்படும் திட்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு வகை திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்திப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை துகள்களாக்கி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இந்திய தகவல் பணியின் பயிற்சி அதிகாரிகளுக்கு அவர் விளக்கி கூறினார்.

Input From: Govt Release

Next Story
கதிர் தொகுப்பு
Trending News