ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்தடைந்த 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்..!
By : Parthasarathy
தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் தங்களுடைய உயிரை இழக்கும் அவல நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களை விட ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் இழந்தர்வர்களே அதிகமாகி உள்ளனர் . பலர் ஆக்ஸிஜன் இல்லாமல் ஆம்புலன்ஸிலேயே இறக்கும் பரிதாப நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது .
இவ்வாறு தமிழக மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஒடிசாவிலிருந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு கண்டெய்னர் டேங்குகளில் ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது. சரக்கு ரயிலில் வந்த திரவ ஆக்சிஜன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு லாரிகள் மூலம் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. ஒடிசாவில் யாஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகத்திற்கு இன்னும் வரவிருக்கும் ஆக்ஸிஜனை கொண்டுவர அரசு மாற்று ஏற்பாடு எடுத்து வருகிறது.