தமிழகத்தில் தி.மு.க. அரசு திட்டமிட்டு கோயில்கள் இடிக்கப்படுவதற்கு ABVP மாநாட்டில் கண்டனம்!
By : Thangavelu
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் 32 லட்சம் மாணவர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய மாணவர் அமைப்பாகும். ஏபிவிபின் 67வது அகில பாரத மாநாடு டிசம்பர் 24 முதல் 26 வரை ஜபல்பூர் மத்திய பிரதேசம் நடைபெற்றது. கொரோனா கால அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி இதில் நாடு முழுவதும் இருந்து 655 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (நேபாள், பங்களாதேஷ், அமெரிக்கா உட்பட ) நேரடியாகவும் 70763 நபர்கள் 2168 இடங்களில் இணையவழி மூலமாகவும் கலந்து கொண்டனர்.
கண்காட்சி:
1965இல் இந்திய இராணுவ போரில் மறைந்த கேப்டன் ரமன் பக்ஷீ அவர்ளது பெயரில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் செய்த சேவை பணிகள் குறித்த கண்காட்சி இடம்பெற்று இருந்தது. துவக்க நிகழ்ச்சி: துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது இன்று இந்தியாவில் பல நூறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள பல்லாயிரம் பிரச்சனைகளுக்கான தீர்வு நம் தாய் நாட்டிடமே உள்ளது என்றார்''.
பேரா.யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது 2021:
ஆண்டுதோறும் இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏபிவிபி சார்பாக பேரா.யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதினை தமிழகத்தைச் சேர்ந்த திரு.கார்த்திகேயன் கணேசன் அவர்கள் (நிறுவனர் சிருஷ்டி அறக்கட்டளை) மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக செய்த சேவைகளை பாராட்டி ரூ.1 லட்சம் மற்றும் விருதும் வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்:
மாநாட்டில் 4 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட. அவை.
1.தற்போதைய கல்வி நிலை
2.தற்போதைய நிலைமை
3.கல்லூரி வளாகங்களில் விளையாட்டிற்கு முக்கியத்துவம்
4.வனவாசி கௌரவ தினம்
தற்போதைய கல்வி நிலை:
1.தேசியக் கல்விக் கொள்கை அமுல்படுத்த தயார் செய்தல்
2.முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளுக்கு 240 தினங்கள் பேரு கால விடுப்பு குறித்த யுஜிசி அறிவிப்பை ஏபிவிபி வரவேற்கிறது.
3.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஆன்லைன் கல்வி முறைகளை ªறிப்படுத்துதல்.
4.இந்திய பாரம்பரிய கல்விமுறையில் உள்ள யோகா, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
நாட்டின் தற்போதைய நிலை:
1.பெண்கள் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்திய மத்தயி அரசின் அறிவிப்பை ஏபிவிபி வரவேற்கிறது.
2.தமிழகத்தில் திட்டமிட்ட ரீதியில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருவதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது.
3.கேரளாவில் தொடர்ந்து தேசபக்தர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது.
கல்லூரி வளாகங்களில் விளையாட்டிற்கு முக்கியத்துவம்:
1.டோக்கியோ மற்றும் பாராலிம்பிக் 26 பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை ஏபிவிபி வாழ்த்துகிறது.
2.விளையாட்டுத்துறைக்கு சிஎஸ்ஆர் நிதி 5 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏபிவிபி வலியுறுத்துகிறது.
3.பாரம்பரி விளையாட்டான சிலம்பம் தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டதை ஏபிவிபி வரவேற்கிறது.
வனவாசி கௌரவ தினம்:
சுதந்திரப் போராட்ட வீரரும் வனவாசிகளின் நாயகருமான பிர்ஷா முண்டா அவர்களது பிறந்த தினமான நவம்பர் 15 வனவாசி கௌரவ தினமாக கொண்டாடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏபிவிபி வரவேற்கிறது.
ஊர்வலம் பொதுக்கூட்டம்:
நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் அவர்களது பாரம்பரிய உடையில் ஊர்வலமாக கலந்து கொண்டனர். நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நினைவஞ்சலி:
இந்திய முப்படைத் தளபதி மறைந்த பிபின் ராவத் மற்றும் அவருடன் வீர மரணமடைந்த இராணுவ அதிகாரிகளுக்கு மாநாட்டில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அறிவிப்புகள்:
இந்த மாநாட்டில் 2021, 2022 கல்வி ஆண்டிற்கான ஏபிவிபியின் அகில பாரத தலைவராக டிஆர்சிஎன் படேல் (குஜராத்) அவர்களும் அகில பாரத பொதுச் செயலாளராக செல்வி நிதி திரிபாதி (டெல்லி ஜேஎன்யு) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து தேசிய செயலாளராக திரு.முத்து ராமலிங்கம் (மதுரை) அவர்களும்
மத்திய செயலாக்க குழு உறுப்பினர்:
1.செல்வி.நிவேதா. கே.(வேலூர்)
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
1.பேரா.கோகுல்ராஜ்
2.திரு.கௌசிக் (சேலம்)
3.திரு.விவேக் (தருமபுரி)
4.திரு.மிதுன் மோகன் தாஸ் (புதுச்சேரி)
5.திரு.கோபி கெங்காதரன் (திருநெல்வேலி)
6.செல்வி.சுசீலா (திருச்சி)
7.திரு.மனோஜ் பிரபாகர் (திருவாரூர்) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால நிகழ்ச்சிகள்:
ஜனவரி 26 இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ''திரிரங்கா யாத்ரா'' நாடு முழுவதும் ஏபிவிபியின் அனைத்து கிளைகளிலும் நடத்தப்படும்.
மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஆய்வு மற்றும் புத்தகங்கள் வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அகில பாரத மாநாட்டின் தீர்மானங்களை அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: ABVB