Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவ அதிகாரி கைதில் செந்தில் பாலாஜி தலையீடு - மருத்துவர் சங்க Dr.ரவீந்திரநாத் குற்றச்சாட்டு!

மருத்துவ அதிகாரி கைதில் செந்தில் பாலாஜி தலையீடு - மருத்துவர் சங்க Dr.ரவீந்திரநாத் குற்றச்சாட்டு!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  8 Jun 2021 1:28 PM IST

பட்டியலின மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு இருப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தேசிய பட்டியலினத்தோர் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் " கொரோனா தடுப்பு பணியில் பட்டியலின மருத்துவ அலுவலர்கள் கூறுவதை பட்டியலினம் அல்லாத மருத்துவ அலுவலர்கள் ஏற்காத போக்கு நிலவி வருகின்றது. மேலும், பட்டியலின அலுவலர்களை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசும் நிலையும் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு பிரச்சனையில் பட்டியலின மருத்துவ அலுவலரை, பட்டியலினம் அல்லாத இளம் மருத்துவ அலுவலர் இழிவாக பேசி, சட்டையை பிடித்து தாக்கியதாகவும், அந்த மருத்துவ அலுவலர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணியின்போது பட்டியலின மருத்துவ அலுவலருக்கும், பட்டியலினம் அல்லாத மருத்துவருக்கும் இடையே, ஏற்பட்ட பிரச்சனையை பெரிதாக்கி பட்டியலினத்தை சேர்ந்த மருத்துவ அலுவலரை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்து இருப்பது கண்டனத்திற்குரியது. இவரது கைது விவகாரத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கையால் பட்டியலின மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மத்தியில் அச்சமும், பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மருத்துவ அலுவலரை உடனே விழுப்புரம் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.மேலும் அவர் மீது போடப்பட்டு உள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேசிய பட்டியலினத்தோர் மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News