திமுக எம்.பி. ராசாவின் சொத்துகளை முடக்கிய ED!
By : Sushmitha
திமுக எம்பி ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் திமுகவின் எம்பி யாக உள்ள ராசாவின் பினாமி நிறுவனத்தின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தனது அதிகாரப்பூர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது அமலாக்கத்துறை.
பிஎம்எல்ஏ, 2002 இன் விதிகளின் கீழ், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராஜாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை ED தனது பினாமி கம்பெனி M/s கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கைப்பற்றியுள்ளது. ஆ. ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தற்காலிக இணைப்பு உத்தரவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, என அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் திமுக எம்பி ராசா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக 2015 சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் ஆ. ராசா அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ் மற்றும் கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என மொத்தம் 17 பேர் மீது சிபிஐ குற்றம் சாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Source - The Hindu