Kathir News
Begin typing your search above and press return to search.

மதம் மாற வற்புறுத்தியதால் மாண்ட பள்ளி மாணவியின் உயிர்! மீண்டும் மௌன விரதத்தில் தமிழக ஊடகங்கள்! #JusticeForLavanya

மதம் மாற வற்புறுத்தியதால் மாண்ட பள்ளி மாணவியின் உயிர்! மீண்டும் மௌன விரதத்தில் தமிழக ஊடகங்கள்! #JusticeForLavanya

DhivakarBy : Dhivakar

  |  20 Jan 2022 7:03 PM GMT

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த லாவண்யா என்ற பன்னிரண்டாம் வகுப்புப் பெண்ணை பள்ளி நிர்வாகம் "மதம் மாறுமாறு" , வற்புறுத்தியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


லாவண்யா பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். பள்ளி நிர்வாகம் லாவண்யாவை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளது. ஆனால் மாணவியோ தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால் அம்மாணவியை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில், பொங்கல் விடுமுறைக்கு அவளது சொந்த வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. பதிலுக்கு மாணவியை பள்ளியின் கழிப்பிடங்களை சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவுதல், சமையல் செய்தல் என துன்புறுத்தியுள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவி, ஜனவரி 9 அன்று பூச்சிக்கொல்லி மருந்தினை உட் கொண்டுள்ளார். அன்றைய இரவே அவர் வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த விடுதியின் கண்காணிப்பாளர் லாவண்யாவின் பெற்றோரை அழைத்து உங்கள் "பிள்ளையை அழைத்து செல்லுங்கள்" என்று கூறி தப்பிக்க முயன்றுள்ளார்.


லாவண்யா வீடு திரும்பியும் அவள் பூச்சிமருந்து உட்கொண்டார் என்பதை பெற்றோர்களிடம் கூறவில்லை. பின்னர் அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததை தொடர்ந்து, அவரை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பொழுது அவருடைய நுரையீரல் 85% பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இப்பொழுது அவர் மரணித்து விட்டார்.


நெஞ்சை பதறவைக்கும் அச் சிறுமியின் கடைசி வாக்குமூலமாக :


என் பெயர் லாவண்யா பள்ளி நிர்வாகம் என் பெற்றோர்களிடம் உங்கள் மகளை மதம் மாற சொல்லுங்கள், அப்படி ஆனால் அவளது பள்ளிப்படிப்பு மென்மையாக்க நாங்கள் உதவுவோம் என்று கூறினர். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இதனால் என்னை கடுமையாக திட்டினர்.


தமிழகத்தில் இச்சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு மத்தியில் சட்டவிரோதமாக மாற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது என்று பலரும் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், தெரிவித்த நிலையில், இச்சம்பவம் அக்குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News