Kathir News
Begin typing your search above and press return to search.

குண்டாஸ்சில் போடுங்க! துணிச்சலாக காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கையிலெடுக்கும் விவகாரம்!

குண்டாஸ்சில் போடுங்க! துணிச்சலாக காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கையிலெடுக்கும் விவகாரம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 May 2022 5:37 AM IST

இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவோர் குறித்து அடுத்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளார் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.

இது குறித்து பேசிய அவர், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில், உலகிலுள்ள சைவ பெருமக்களின் மூல ஸ்தானமாக திகழ்ந்து வருகிறது.. பல கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து, ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது ஆதீன பெருமக்கள், சிவனடியார்கள், மடாதிபதிகள், பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வருகிறது.. தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது ஏற்பட்டு பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றன.

இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினாலும் அதற்கு உரிய தீர்வு ஏற்படுவதில்லை. எனவே, மத நம்பிக்கையை புண்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Inputs From: OneIndia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News