Kathir News
Begin typing your search above and press return to search.

"மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் PFI" - இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும்  PFI - இந்துமுன்னணி குற்றச்சாட்டு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Aug 2022 1:11 AM

கோவை: PFI அமைப்பு மத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக, இந்து முன்னணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) எனப்படும் இஸ்லாமிய அமைப்பின் மீது பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக ஆளுநர் R.N ரவி "PFI அமைப்பு தடை செய்ய வேண்டிய அமைப்பு" என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு, PFI மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட முகநூல் பதிவில் : இந்தியாவில் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இயக்கமும் தமிழக ஆளுநரே தடைசெய்ய வேண்டிய பயங்கரவாத இயக்கமென கூறிய PFI SDPI இயக்கத்தினர் கோவையில்‌ நாடகம் என்ற பெயரில் கோவையில் இந்து மதத்தை இழிவுப்படுததி மதகலவரத்தை தூண்ட முயற்சி.மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு.சதிஷ் அவர்கள் தலைமையில் இந்துமுன்னணி நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் நடவடிக்கை கோரி புகார்.

எனப் பதிவிட்டுள்ளது.

Hindu munnani


இந்து முன்னணியின் புகாரை ஏற்று, காவல்துறை உரிய விசாரணை நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News