பிரதமர் மோடி வரை போனது S.G சூர்யா கைது விவகாரம் - நிர்மலா சீதாராமன் வைக்கும் செக்!
By : Kathir Webdesk
கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரின் வற்புறுத்தலால் சாக்கடையை சுத்தம் செய்த ஒரு தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சூர்யா ஒரு பதிவு வெளியிட்டார்.
மதுரை எம்.பி. வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக சூர்யா கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றுக்காக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது கண்டனத்துக்குரியது.
மலக்குழி மரணங்களின் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல், அதைப் பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்துப் போராடுவோம் என கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாஜ தலைவர் நட்டா ஆகியோரின் கவனத்துக்கு நிர்மலா சீதாராமன் கொண்டு சென்றார்.
சூர்யா போட்ட பதிவு முதல் கைது வரை நடந்த சம்பவங்களை தலைவர்களிடம் விளக்கிக் கூறினார். அதைத் தொடர்ந்து, டில்லி பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த பாஜக செய்தி தொடர்பாளர் 'டாம் வடக்கன், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். சூர்யாவுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்யும்படி தமிழக பாஜக தலைவர்களுக்கு கட்சி மேலிடம் கூறியுள்ளது.
Input From: Dinamalar