Kathir News
Begin typing your search above and press return to search.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! அவதூறு வழக்கை எதிர்கொண்ட S.G சூர்யாவுக்கு மதுரை கோர்ட் ஜாமீன்!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! அவதூறு வழக்கை எதிர்கொண்ட S.G சூர்யாவுக்கு மதுரை கோர்ட் ஜாமீன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2023 9:52 AM GMT

மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி வெங்கடேசனுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட, தமிழக பா.ஜ., மாநில செயலர் சூர்யாவுக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிக நெருக்கமாக இருப்பவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் பா.ஜ.க செயலாளர், சூர்யா மதுரையில், பெண்ணாடம் பேரூராட்சி, 12வது வார்டு கம்யூ., கவுன்சிலர் விஸவ்நாதன், மலம் கலந்த நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு, துாய்மை பணியாளர் ஒருவர் இறந்தார்.

எங்கே உங்கள் போராட்ட குணம், உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் என, எம்.பி., வெங்கடேசனிடம் கேள்வி எழுப்பி டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இது, சர்ச்சையான நிலையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை கடந்த, 18ம் தேதி கைது செய்தனர்.

எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையும் செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை பதிவு செய்தது.இதனிடையே மதுரை மத்திய சிறையில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சூர்யாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News