நடராஜ பெருமான் இழிவுபடுத்திய U2 Brutus மீது குண்டர் சட்டம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
By : Thangavelu
இந்து கடவுளான நடராஜ பெருமானை இழிவு படுத்தி யூடியூபில் வீடியோ வெளியிட்ட நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து கடவுளான நடராஜ பெருமானை இழிவு படுத்தி பேசிய நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. #இந்துமுன்னணி #கன்னியாகுமரி #குமரி #U2Brutus pic.twitter.com/XaU4pNovoE
— Hindu Munnani (@hindumunnaniorg) May 2, 2022
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூ2 புருட்டஸ் என்ற யூடியூப் சேனலில் சிதம்பரம் நடராஜர் பெருமானை மிகவும் தவறான முறையில் விமர்சனம் செய்து காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு இந்து முன்னணி, பா.ஜ.க., கடும் கண்டனங்களை தெரிவித்தது. வீடியோ வெளியிட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இந்து கடவுளான நடராஜ பெருமானை இழிவு படுத்திய வீடியோ வெளியிட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போன்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இந்து முன்னணி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter