இரவு 10 மணி வரை கடைகளைத் திறக்கலாம்-முதல்வர்.!
இரவு 10 மணி வரை கடைகளைத் திறக்கலாம்-முதல்வர்.!
By : Kathir Webdesk
சீனா வூஹான் மாகாணத்தில் உருவாகி உலகம் முழுவதும் அணைத்து நாடுகளையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று. 4 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து, 11 லட்சம் மக்களை காவுவாங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதில் அணைத்து நாடுகளும் இறங்கியுள்ளது. தடுப்பு மருந்து இல்லாததால் மக்கள் ஆதிக்கம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 21 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்த பல கட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வந்தது. கடைகள் திறப்பதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இரவு 8 மணி வரை தான் கடைகள் திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது.
தமிழகத்தில் Containment பகுதிகளை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் இரவு 10 மணி வரை அனைத்து விதமான கடைகள் திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.