Kathir News
Begin typing your search above and press return to search.

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு வெளியிட உள்ளது.

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு!
X

ThangaveluBy : Thangavelu

  |  25 Aug 2021 3:44 AM GMT

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு வெளியிட உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் கண்ணம்மாள் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதனடிப்படையில் நடைபெற்று வரும் நியமனங்களை தடுக்கின்ற வகையில் சட்டத்திற்கு தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே அரசு தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. எனவே தடைவிதிக்க வேண்டிய அவசியம் இல்லை என வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதி பற்றி இன்று முடிவு செய்வதாக கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/10-5-reservation-case-today-highcourt-decision.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News