Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 10 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு.. வழக்கம் போல் முகாம் செயல்படும்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 10 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு.. வழக்கம் போல் முகாம் செயல்படும்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2021 7:46 AM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருந்தபோதிலும் சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதலான தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தது. இந்த தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்திருந்த நிலையில், நேற்று மட்டும் சுமார் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி முகாம்கள் வழக்கம் போல் சென்னையில் செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News