Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று முதல் மின்சார மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அமல் -தமிழக அரசு.!

இன்று முதல் மின்சார மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அமல் -தமிழக அரசு.!

இன்று முதல் மின்சார மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அமல் -தமிழக அரசு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Nov 2020 2:38 PM GMT

தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கைத் திங்களன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவானது போக்குவரத்துக்கு ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் 31.12.2022 வரை மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கை அளிக்கக் கோரிய பின்னர் பரிசீலிக்கப்பட்டது.




வாகனங்கள் மூலம் காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் அதனை ஊக்குவிக்கவும் பல்வேறு நெறிமுறைகளைத் தமிழக அரசு கொண்டுவந்தது.

கடந்த ஆண்டு முதல்வர் மின்சார வாகனங்களுக்கு வெளியிட்ட வாகன கொள்கையில் 50 ஆயிரம் கோடி முதலீடுகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. அதனை அடுத்து மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக 2031 குள் தமிழகத்தில் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கத் திட்டமிடப்பட்டது.

மேலும், மின்சார பேட்டரி வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதனை அடுத்துக் கடந்த ஆண்டு நவம்பர் 18 போக்குவரத்துக்கு ஆணையர் மூலம் தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் 2022 டிசம்பர் 31 வரை மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை இருந்தது. அதனை இந்த கோரிக்கையைப் பரிசீலித்து தற்போது 100 சதவீத வரிவிலக்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த உத்தரவை உள்துறை தலைமைச் செயலாளர் S K பிரபாகர் திங்களன்று வெளியிட்டார். அதில், 2008 இல் ஒருமுறைக்கு மோட்டார் வாகனங்களுக்கு 750 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய பேட்டரி வாகனங்களுக்கு 3 சதவீத வரி வழங்கப்பட்டது. அதன்படி போக்குவரத்துக்கு ஆணையரின் கோரிக்கையை அடுத்து பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்குச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) முதல் 31.12.2022 வரை 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகின்றது என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News