சோழவந்தானில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த விநாயகர் கோயிலை புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவில் அமைந்துள்ள சோழவந்தானில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொய்கை விநாயகர் கோயில் ஒன்று மிகவும் பாழடைந்து வருவதாகவும் அதனை புதுப்பிப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
By : Thangavelu

இக்கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ளது. இந்த கோயில் உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இதன் பின்னர் ராணி மங்கம்மாள் கோயில் முன் மண்டபம் எழுப்பி இடது புறம் சொர்ணமவுலீஸ்வரர், நந்தி சிலை ஒன்றை வைத்தார். காலப்போக்கில் பராசக்தி சிலை ஒன்று காணாமல் போய் பல வருடங்கள் ஆகிறது. இருந்தபோதிலும் தினமும் ஒருகால பூஜை நடக்கிறது.
மேலும், இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் மாடக்குளத்தில் இருப்பதாக கல்வெட்டுக்கள் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அறநிலையத் துறையினர் முறையாக கோயிலை பராமரிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. கோயில் முழுவதும் பல்வேறு வகையிலான மரங்கள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. அது மட்டுமின்றி கருவறைக்குள் பெருச்சாளிகள் துளைபோட்டு உள்ளே வந்து செல்வதால் கட்டடமே ஆட்டம் கண்டுள்ளது. எனவே முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று கோயிலை பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Dinamlar
Image Courtesy: Dinamani