Kathir News
Begin typing your search above and press return to search.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்: இணையதளத்தில் பதிவேற்ற அரசு உத்தரவு.!

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்க அனுப்பப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்: இணையதளத்தில் பதிவேற்ற அரசு உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2021 6:45 PM IST

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்க அனுப்பப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதே போன்று 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி எனவும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உத்தரவு பிறப்பித்தது. அது மட்டுமின்றி 10 நாட்களுக்கு மதிப்பெண் கணிக்கிடும் முறையை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து நாளை முதல் வருகின்ற 30ம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News