சேலம், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீக்கம்.. இன்று முதல் பொதுவான தளர்வுகள்.!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவத் தொடங்கியது. பின்னர் மே, ஜூன் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

By : Thangavelu
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவத் தொடங்கியது. பின்னர் மே, ஜூன் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதனை தொடர்ந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் குறையத்தொடங்கியது. இதனால் தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டது.
பாதிப்பு குறையாமல் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டது. தேநீர் கடைகள் மற்றும் ஓட்டல்கள், வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு 11 மாவட்டங்களில் குறையத்தொடங்கியிருப்பதால், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தளர்வுகளை போன்று இந்த 11 மாவட்டங்களிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.